வணிகர்களின் கோரிக்கையை ஏற்று... ‘டெபிட் கார்டு’ சேவை கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

தினமலர்  தினமலர்
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று... ‘டெபிட் கார்டு’ சேவை கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:‘டெபிட், கிரெ­டிட் கார்டு சேவை கட்­ட­ணத்தை குறைக்க வேண்­டும்’ என, வணி­கர்­கள் விடுத்த கோரிக்கை தொடர்­பாக, ரிசர்வ் வங்­கி­யு­டன், மத்­திய அரசு ஆலோ­சனை நடத்த உள்­ளது.

கடந்த ஆண்டு, பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் போது, நாட்­டில் ரொக்­கப் புழக்­கம் குறைந்­தது. இதை­ய­டுத்து, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, பல்­வேறு சலு­கை­கள் அறி­விக்­கப்­பட்­டன.அவற்­றில் ஒன்­றாக, பொருட்­கள் விற்­ப­னை­யில், ‘டெபிட், கிரெ­டிட்’ கார்­டு­களை ஏற்­கும் வணி­கர்­க­ளி­டம், வங்­கி­கள் வசூ­லிக்­கும், எம்.டி.ஆர்., பரி­வர்த்­தனை கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டது.

இதன்­படி, 1,000 ரூபாய் வரை, 0.25 சத­வீ­தம்; 2,000 ரூபாய் வரை, 0.50 சத­வீ­தம் என, பரி­வர்த்­தனை கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.இந்­நி­லை­யில், ரிசர்வ் வங்கி, சமீ­பத்­தில்,புதிய அறி­விப்பை
வெளி­யிட்­டது.அதில், ‘கடந்த நிதி­யாண்­டில், 20 லட்­சம் ரூபாய் வரை, விற்­று­மு­தல் கண்ட சிறிய வணி­கர்­க­ளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்­படும், சாத­னம் மூலம், டெபிட் கார்டு பரி­வர்த்­தனை மேற்­கொள்­வ­தற்­கான கட்­ட­ணம், 0.40 சத­வீ­தம்; இதர வணி­கர்­க­ளுக்கு, 0.90 சத­வீ­தம்’ என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

மேலும், பெரிய வணிக நிறு­வ­னங்­க­ளுக்கு, 1,000 ரூபாய்க்கு மிகாத, டெபிட் கார்டு பரி­வர்த்­தனை கட்­ட­ணம், 0.5லிருந்து, 0.9 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது.இந்த கட்­டண உயர்­வுக்கு, இந்­திய சில்­லரை வியா­பா­ரி­கள் சங்­கம் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

‘பரி­வர்த்­தனை கட்­டண உயர்வை, நுகர்­வோ­ரின் தலை­யில் தான் சுமத்த நேரி­டும் என்­ப­தால், உயர்த்­தப்­பட்ட கட்­ட­ணத்தை, மீண்­டும், 0.40 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும்’ என, இச்­சங்­கம், மத்­திய அர­சி­டம் வலி­யு­றுத்தி உள்­ளது.இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பரி­வர்த்­தனை கட்­டண விவ­கா­ரம் தொடர்­பாக, வணி­கர்­கள் விடுத்­துள்ள கோரிக்கை குறித்து, நிதி­ய­மைச்­சக அதி­கா­ரி­கள், ரிசர்வ் வங்­கி­யு­டன் ஆலோ­சனை நடத்த உள்­ள­னர். இதில், சுமுக தீர்வு காணப்­படும் என, தெரி­கிறது’ என்­றார்.

எம்.டி.ஆர்., என்றால் என்ன?

பொருட்­கள் விற்­ப­னை­யில், ‘கிரெ­டிட், டெபிட்’ கார்­டு­கள் வாயி­லான பரி­வர்த்­த­னைக்கு, வணி­கர்­க­ளி­டம், வங்­கி­கள் வசூ­லிக்­கும் கட்­ட­ணம், எம்.டி.ஆர்., எனப்­ப­டு­கிறது.இக்­கட்­ட­ணத்தை, வணி­கர்­களின் கணக்கை பரா­ம­ரிக்­கும் வங்­கி­கள், நுகர்­வோர் கணக்கு வைத்­துள்ள வங்­கி­கள், கிரெ­டிட், டெபிட் கார்­டு­களை வழங்­கும் விசா, மாஸ்­டர் கார்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், பங்­கிட்­டுக் கொள்­கின்றன.

‘பாதிப்பில்லை’

கார்டு பரி­வர்த்­த­னை­கள், அதி­க­ள­வில், பெரிய வணிக நிறு­வ­னங்­களில் தான் நடக்­கின்றன.
அத­னால், சிறிய நக­ரங்­களில், சிறு வணி­கர்­கள் அதி­க­ள­வில் டெபிட் கார்­டு­களை
ஏற்­ப­தற்­காக, பரி­வர்த்­தனை கட்­ட­ணங்­கள் சீர­மைக்­கப்­பட்டு உள்­ளதே தவிர, உயர்த்­தப்­ப­ட­வில்லை. வங்­கி­க­ளுக்­கும், வர்த்­த­கர்­க­ளுக்­கும் பாதிப்­பில்­லாத வகை­யில், கட்­டண விகி­தம்
நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

பி.பி.கனுங்கா, துணை கவர்னர், ரிசர்வ் வங்கி

மூலக்கதை