அதிவேக இணையத் தொடர்பு - அரசின் 100 மில்லியன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிவேக இணையத் தொடர்பு  அரசின் 100 மில்லியன்!!

பிரான்சில் அனைவரிற்கும் அதிவேக இணையத் தொடர்பு (haut débit) கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் 100 மில்லியன் யூரோக்களை ஒதுக்கி உள்ளதாக, பிரான்சின் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார்.
 
2020 இற்குள் அனைவரிற்கும் ஓரளவேனும் வேகமான இணைய இணைப்புக்கள் (bon haut débit) ஏற்படுத்தப்படும் என்றும் 2022 இற்குள் அனைவரிற்கும் அதிவேக இணைப்புகள் (très haut débit) வழங்கப்படும் என்றும், அரசாங்கத்தின் திட்டத்தினை இன்று பிரதமர் விளக்கி உள்ளார்.
 
 
மிகவும் பின்தங்கிய இடங்கள், தனித்து இருக்கும் வீடுகள், வேக இணையத் தொடர்புகள் ஏற்படுத்தப்படாத பகுதிகள் என 1.5 மில்லியன் வீடுகளிற்கு, இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தலா 150 யூரோக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அவர்களிற்கான இணைப்புக்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடிவதோடு, அதற்கான இணைப்பு வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க உள்ளது.
 

மூலக்கதை