அரசு வேலை வாங்கி தருவதாக 35 லட்சம் மோசடி பெரம்பலூர் கூடுதல் எஸ்.பி. மீது நடவடிக்கை?

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு வேலை வாங்கி தருவதாக 35 லட்சம் மோசடி பெரம்பலூர் கூடுதல் எஸ்.பி. மீது நடவடிக்கை?

திருச்சி: புதுச்சேரி வசந்தநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஆரம்பத்தில் திருச்சி  கன்டோன்மென்ட் கேலக்சி டவரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அப்போது,  இவரது மாமனார் சேகரிடம் தனது தம்பி, தங்கைக்கு அரசு வேலை வாங்கி தர  வேண்டும் என்று கூறி ஆலோசனை கேட்டார். அப்போது திருச்சி கோட்டை  காவல்நிலையத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த ஞான சிவக்குமார் எனது  நெருங்கிய நண்பர்.

அவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதற்காக மாமனார் சேகர் மூலம்   ரூ. 35 லட்சத்தை  தற்போது பெரம்பலூரில் கூடுதல் எஸ்பியாக உள்ள ஞானசிவகுமாரிடம்  கடந்த 2014ல் கொடுத்துள்ளார். உடனே அவர்  2 பேரையும் குரூப்-1 தேர்வு எழுதும்படி கூறியுள்ளார்.

ஏடிஎஸ்பி கூறியபடி  தம்பி, தங்கையை குரூப்-1 தேர்வு எழுத வைத்தார். ஆனால் அதில் இருவரும்  தேர்வாகவில்லை.

குறிப்பிட்டபடி அவர் வேலையும் வாங்கி தரவில்லை.

கொடுத்த  பணத்தை பாலமுருகன் திருப்பி கேட்ட போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பின்னர்  முதல்கட்டமாக ரூ. 3. 5லட்சத்தை கூடுதல் எஸ்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை  பாலமுருகன் கேட்ட போது தொடர்ந்து மிரட்டல் வந்ததால்  பாலமுருகன், திருச்சி வீட்டை காலி  செய்துவிட்டு குடும்பத்தோடு புதுச்சேரி சென்று விட்டார்.   இது தொடர்பாக பாலமுருகன் பெரம்பலுார் எஸ்பியிடம் புகார் தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பாலமுருகன் திருச்சி  ஜேஎம்-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது தம்பி,  தங்கைக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 35 லட்சத்தை பெரம்பலுார் கூடுதல் எஸ்பி.

ஞானசிவக்குமார் ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த  நீதிபதி,  மோசடி  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு  உத்தர விட்டார்.

அதன்பேரில் கூடுதல் எஸ். பி. ஞானசிவக்குமார் மீது நேற்று மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.   இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் எஸ். பி.

மீது  மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.    

.

மூலக்கதை