அப்போலோ மருத்துவமனையில் சிகிச்ைச பெறும் போது ஜெயலலிதாவுக்கு சுய நினைவு திரும்பியதா?: தீபக்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்ைச பெறும் போது ஜெயலலிதாவுக்கு சுய நினைவு திரும்பியதா?: தீபக்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன் நேற்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆஜரானார். அவர், போயஸ் கார்டனில் பணிபுரிந்த ராஜம்மாள், 2 பழைய ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

மேலும், சசிகலா குடும்பத்தினர் கடந்த 2011ல் இருந்தே ஜெயலலிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் இன்று காலை 10. 30 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை  நடத்தினார். அப்போது, அவரிடம் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது பார்த்தீர்களா?, ஜெயலலிதாவுக்கு சுய நினைவு திரும்பியதா? மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார்? உங்களிடம் டாக்டர்கள் என்ன கூறினார்கள்? எத்தனை நாள் மருத்துவமனையில் இருந்தீர்கள்? என்று அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


 இதற்கு தீபக் உரிய விளக்கம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

இந்த நிலையில் நாளை தீபா கணவர் மீண்டும் ஆஜராகவுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை