கல்வி செம்மல் கோ.ப.செந்தில்குமார் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள்: நாளை நடைபெறுகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்வி செம்மல் கோ.ப.செந்தில்குமார் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள்: நாளை நடைபெறுகிறது

மதுராந்தகம்: அன்னசத்திரங்களும் அறச்சாலைகளும் ஆயிரமாயிரமாக நாட்டி அறம் வளர்த்தாலும் அதனினும் மேலானது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதை நன்குணர்ந்தவர் ஆதிபராசக்தி கல்வி நிறுவன தாளாளர் செந்தில்குமார். அவரது கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

கட்டணமின்றி விடுதியில் பயிலவும் வசதி செய்யப்படுகிறது. இதுதவிர கல்வியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களையும் நகர்ப்புற மாணவர்களுக்கு ஈடாக நிகரற்ற மாணவர்களுக்கு ஈடாக நிகரற்றவர்களாக உருவாக்க கல்வி மட்டுமின்றி கல்வி சார்ந்த இதய பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதியில் தங்க பயிலும் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இக்கல்வி நிறுவன வளாகம் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் கொண்ட பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு சிறப்புகளின் அடிப்படையில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை தேசிய அளவிலான சிறந்த சுயநிதி பொறியியல் கல்லூரியாக இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் பகுதியாக பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு இலவச குப்பை தொட்டிகள் வழங்கப்படுகிறது.

மேலும் இவரது கல்வி சேவையை பாராட்டி பிரபல ஆங்கில நாளிதழ் கல்வி செம்மல் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மாணவர்களுக்கு கலங்கரைவிளக்கமாக திகழ்கிற டாக்டர் கோ. ப. செந்தில்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மரக்கன்று நடும் விழா நடைபெறுகிறது.

அத்துடன் சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு, ஓரத்தி, இரும்புலி, படாளம், ராமாபுரம், எலப்பாக்கம், எண்டத்தூர், காட்டுக்கரணை, கயப்பாக்கம், அனந்தமங்கலம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், மின் விசிறிகள் மற்றும் கரும்பலகைகளும் நாளை வழங்கப்படுகிறது.

மேலும், 10 மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கிகளும், பேனா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது.

.

மூலக்கதை