விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாட்டின் முதல் நீர்விமானம்

தினமலர்  தினமலர்
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாட்டின் முதல் நீர்விமானம்

புதுடில்லி : நாட்டின் முதல் நீர் விமானம் மும்பையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நீரிலும், ஆகாயத்திலும் இயங்கக் கூடிய இந்த சிறிய ரக விமானம், 12 பேர் வரை பயணம் செல்ல கூடியதாகும்.

சோதனை இயக்கத்தின் போது கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் கட்காரி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் ராஜூ ஆகியோர் பயணம் செய்தனர். பின்னர் சபர்மதி ஆற்றில் சுமார் 180 கி.மீ., தொலைவில் நடந்த வெள்ளோட்டத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

இது போன்று நீர் விமானங்கள் கனடா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மட்டுமே உள்ளது. ரூ.12 முதல் 13 கோடி தொகை கொண்ட இந்த நீர்விமானம் விரைவில் நாட்டின் 111 நதிகளில் உள்ள வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகள், சிறு வணிகர்கள் பலருக்கும் இது உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஜப்பானின் சிடோச்சி நிறுவனத்திடம் இருந்து இது போன்ற 100 க்கும் மேற்பட்ட கோடியாக் நீர்விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டிற்குள் இந்த நீர்விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நீர்விமானங்கள், விமானநிலையங்கள் இல்லாத புறநகர் பகுதிகளுக்கும் நீர்வழி பயணம் மேற்கொள்ள உதவிகரமாக அமையும் என கூறப்படுகிறது. மும்பை போன்ற பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இவை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மும்பையை தொடர்ந்து யமுனை, கங்கை நதிகளிலும் இந்த நீர் விமானத்தை சோதிக்க சிடோச்சி நிறுவனத்திற்கு கட்காசி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவின் நாக்பூரில் இந்த நீர்விமானங்களின் உற்பத்தியை துவக்க வருமாறு சிடோச்சி நிறுவனத்திற்கு கட்காரி அழைப்ப விடுத்துள்ளார்.

மூலக்கதை