பார்ட்டியின் கதை இது தான்

தினமலர்  தினமலர்
பார்ட்டியின் கதை இது தான்

வெங்கட் பிரபு தற்போது இயக்கி உள்ள படம் பார்ட்டி, முழு கதையும் பிஜி தீவில் நடக்கிறது. அங்கேயே 50 நாட்களுக்குமேல் தங்கியிருந்து படம்பிடித்து திரும்பியிருக்கிறார்கள். அம்மா கிரியேஷன் சிவாவுக்கு இது 25வது படம். ஜெய், சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், கயல் சந்திரன், ரெஜினி, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார். படத்தின் கதை இதுதான்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அவற்றை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள் என்ற பணமதிப்பிழப்பை அறிவித்தார். இதை அடிப்படையாக வைத்து தான் இந்த கதை அமைந்துள்ளது.

தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத பணத்தை திருட்டுத்தனமாக மாற்றி புதிய ரூபாயை பெற பார்ட்டி படத்தில் உள்ள பலரும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பிஜி தீவில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அந்த ஒரு இரவு பார்ட்டிக்குள் அவர்கள் தங்கள் பணத்தை மாற்றினார்களா, பார்ட்டி கொண்டாடினார்களா, புத்தாண்டு அவர்களுக்கு சந்தோஷமாக தொடங்கியதா என்பது தான் கதை.

ஒரே இரவில், ஒரே பார்ட்டியில் நடக்கும் கதை. படப்பிடிப்பு முழுவதும் இரவிலேயே நடக்கிறது. படம் முழுக்க குடியும் கும்மாளமுமாக இருக்கும் என டீசரை பார்த்தாலே தெரிகிறது. டீசர் வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

மூலக்கதை