வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்க அமைச்சர்

தினமலர்  தினமலர்
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்க அமைச்சர்


வாஷிங்டன்: வடகொரியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறினார்.
வடகொரியா அவ்வப்போது அணு சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் அட்லாண்டிக் கவுன்சில் கொள்கை அமைப்பின் மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இதில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது;

வடகொரியா தனது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை கைவிடும் பட்சத்தில் நிபந்தனையற்ற பேச்சவார்த்தைக்கு தயார். பேச்சுவார்த்தை வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் சம்மதம் என்றார். உடன் சதுர மேசையா அல்லது வட்டமேசையா என ஏதாவது ஒன்றிற்கு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மூலக்கதை