ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் முடிவுக்கு பாலஸ்தீனம் கண்டனம்

தினமலர்  தினமலர்
ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் முடிவுக்கு பாலஸ்தீனம் கண்டனம்

இஸ்தான்புல்: இ்ஸ்ரேல் -பாலஸ்தீன அமைதி பேச்சசுவார்த்தையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பாலஸ்தீனத்தவர்கள் எவரும் பணி செய்யமாட்டார்கள் என பாலஸ்தீன அதிபர் தெரிவி்த்தார்.
இ்ஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை கடந்த 6-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவர்த்தைக்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ். துருக்கியின் இஸ்தான்புல்நகரில் நடந்த மாநாட்டில் பேசியது, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக மாற்றியது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெரியகுற்றம்..இதை ஐ.நா.வில் முறையிட வேண்டும். இ்ஸ்ரேல் -பாலஸ்தீன அமைதி பேச்சசுவார்த்தையில் இனி அமெரிக்காவிற்கு ஆதரவாக பாலஸ்தீனத்தவர்கள் எவரும் பணி செய்யமாட்டார்கள் இங்குள்ள சர்வதேச சமூகத்தினை சேர்ந்த தலைவர்கள் கிழக்கு ஜெருசலேமின் நகரை பாலஸ்தீனித்தின் தலைநகரமாக அங்கீகரிக்க வேண்டும். என்றார்.

மூலக்கதை