டான் 3யில் தீபிகா நடிக்கவில்லை

தினமலர்  தினமலர்
டான் 3யில் தீபிகா நடிக்கவில்லை

டான் படங்களின் வரிசையில் டான் 3 படம் உருவாக உள்ளது. ரித்தேஷ் சித்வானி தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து புக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்தேஷ் சித்வானியிடம் கேட்டபோது, அவர் கூறியதவாது... டான் 3 படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை. தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. விரைவில் படம் பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்றார்.
டான் 3-யிலும் ஷாரூக்கானே ஹீரோவாக தொடர, பர்கான் அக்தர் இயக்க உள்ளார்.

மூலக்கதை