கலே - கனரக வாகனத்தில் ஏற முற்பட்ட அறுபது அகதிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கலே  கனரக வாகனத்தில் ஏற முற்பட்ட அறுபது அகதிகள்!!

நேற்று செவ்வாய்க்கிழமை அறுபது அகதிகள் வரை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனங்கள் மீது ஏற முற்பட்டுள்ளனர். 
 
காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின் படி, பா-து-கலே சுற்றுவட்ட வீதியில், பிரித்தானியா நோக்கி செல்லும் வீதியின் குறுக்கே பார பொருட்களை வீசி வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அறுபது அகதிகள் வரை வீதிகளை மறித்ததாகவும், கனரக வாகனங்களில் ஏற முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் குவிந்த காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி அகதிகளை கலைத்தனர். 
 
பா-து-கலேயில் இருந்து, அகதிகள் பிரித்தானியாவின் டோவர் பகுதிக்கு செல்ல முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூலக்கதை