விண்கற்கள் விழும் அற்புத காட்சிகள்: நேரலையாக ஒளிபரப்ப நாசா திட்டம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: வானில் இருந்து விண்கற்கள் விழும் அற்புத காட்சிகளை நேரலையாக ஒளிபரப்ப நாசா திட்டமிட்டுள்ளது.  விண்கற்கள் விழுவது அற்புதமான காட்சியாகத் தோற்றமளிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆண்டுதோறும் விண்ணில் தோன்றக்கூடிய இந்த நிகழ்வு அமெரிக்காவில் டிசம்பர் 13ம் தேதி அந்நாட்டு நேரப்படி மாலை ஏழரை மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை விழவுள்ளது. இவை இருள் சூழ்ந்த இரவு வானில் தெளிவாக தெரியும் என்பதால் ஜெமினிட் என பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இந்தியாவில் இந்திய நேரப்படி டிசம்பர் 14ம் தேதி காலை சுமார் 7 மணி முதல் டிசம்பர் மாலை 3 மணி வரை தெரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி 14ம் தேதி இரவு 2 மணியளவில் அதிகப்டச விண்கற்கள் பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நாசா எம்.எஃப்.எஃப்.சி. யூஸ்ட்ரீம் மூலம் நாசா இந்த அழகிய நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை