சூர்யாவை வீழ்த்திய விராட் கோஹ்லி!

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூர்யாவை வீழ்த்திய விராட் கோஹ்லி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி-பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காதல் திருமணம், இத்தாலி நாட்டில் நேற்று முன் தினம் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவின் திருமண புகைப்படங்கள்தான், கடந்த 2 நாட்களாக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

திருமணம் பற்றிய செய்தியை டிவிட்டரில் அறிவித்த விராட் கோஹ்லி, திருமண புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா, ‘’தானா சேர்ந்த கூட்டம்’’ படத்தின் 2வது லுக் தொடர்பாக டிவிட் செய்திருந்தார்.

அதுவே 2017ம் ஆண்டின் கோல்டன் டிவிட் ஆக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் அந்த டிவிட் தற்போது வரை 74,000க்கும் மேற்பட்ட ரீ டிவிட்களை பெற்றுள்ளது.



ஆனால் விராட் கோஹ்லியின் டிவிட் அதை ஓவர்டேக் செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக 78,000க்கும் மேற்பட்ட ரீ டிவிட்களை விராட் கோஹ்லியின் டிவிட் பெற்று விட்டது.

கிரிக்கெட் களத்தை போல் சமூக வலைதளங்களிலும் விராட் கோஹ்லி மிகவும் புகழ்பெற்றவர். விராட் கோஹ்லி மோசமாக விளையாடுவதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என கடந்தாண்டு ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

வெகுண்டெழுந்த விராட் கோஹ்லி, ‘’அனுஷ்கா சர்மாவை இடைவிடாது கிண்டல் செய்பவர்களால் வெட்கப்படுகிறேன். அனுஷ்கா சர்மா எப்போதும் எனக்கு ஊக்கம் தருகிறார்’’ என டிவிட் செய்தார்.

அத்துடன் ‘’ஷேம் (வெட்கம்)’’ என்ற படம் ஒன்றையும் பதிவிட்டார். அதுதான் 2016ம் ஆண்டின் கோல்டன் டிவிட் ஆக உருவெடுத்தது.

அல்லது அந்த ஆண்டில் அதிகம் ரீ டிவிட் செய்யப்பட்ட டிவிட் அதுவே.



.

மூலக்கதை