புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியம் சாதனை

தினகரன்  தினகரன்

பெர்லின் : அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜிபிஎஸ், ரஷ்யாவின் குளோனஸ் ஆகியவற்றிற்கு இணையான புவி வழிக்காட்டி அமைப்பை உருவாக்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 4 செயற்கைகோள்களை ஐரோப்பிய ஒன்றியம் விண்ணில் செலுத்தியுள்ளது. பிரஞ்சு கயானாவில் உள்ள ஏவுத்தளத்தில் இருந்து 4 ராக்கெட்டுகளையும் சுமந்து கொண்டு ஏரியன்-5 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. 4 செயற்கை கோள்களையும் ஏரியன்-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது. அதன் மூலம் ஜிபிஎஸ்-க்கு இணையான ஐரோப்பிய ஒன்றியத்தின் கலீலியோ திட்டத்தின் கீழ் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. ஜிபிஎஸ், சுடன் கலீலியோவையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் இடங்களை மிகவும் துல்லியமாக கணிக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.

மூலக்கதை