அணு ஆயுத சோதனையை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அமெரிக்கா

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதசோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா இடையேயான வார்த்தைப் யுத்தம் பதற்றத்துக்கு வழிவகுத்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா சீனாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். மேலும் வடகொரியாவுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பினால் தென்கொரிய எல்லைகளில் உள்ள தங்கள் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள சீனா ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடகொரியா அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க ராணுவ தயாரிப்புகள் வலுவாக உள்ளன. எனினும் வடகொரியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்று ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை