ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம்: அடுத்தடுத்த நில அதிர்வுகளால் மக்கள் அச்சம்

தினகரன்  தினகரன்

லெபனான்: ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரான் நாட்டின் கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 எனநில நடுக்கம் பதிவானது. 57 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளது. 18 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்காக அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.11 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.0 ரிகடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதன் பின் சில நிமிட இடைவெளியில் 5.0, 4.5 என இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழந்துள்ளனர். நேற்று முன்தினம் 5.4 என நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை