இல்-து-பிரான்ஸ் - 547 கிலோமீட்டர்கள் நீளத்துக்கு போக்குவரத்து தடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்ஸ்  547 கிலோமீட்டர்கள் நீளத்துக்கு போக்குவரத்து தடை!!

கோடை விடுமுறைக்கு பின்னர் அதிகளவான போக்குவரத்து நெரிசலை இல்-து-பிரான்ஸ் மாகாணம் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது.
 
மொத்தம் 547 கிலோமீட்டர்கள் நீளத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசல் இடம்பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி பதிவான 546 கிலோமீட்டர்கள் நீள போக்குவரத்து நெரிசலின் சாதனையை முறியடித்துள்ளது. வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன், இடம்பெற்ற விபத்து ஒன்றை தொடர்ந்தே இந்த அதிகூடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இன்று இடம்பெற்ற தொடரூந்து தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் RER A மற்றும்B தடைப்பட, பொதுமக்கள் மகிழுந்து உள்ளிட்ட வாகங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் இன்று இந்த போக்குவரத்து நெரிசல் இடம்பெற்றுள்ளது. 
 
547 எனும் அதிகூடிய தூரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.42 மணிக்கு பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை