பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து ஜாஹிர் நாயக் மனு

தினமலர்  தினமலர்
பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து ஜாஹிர் நாயக் மனு

மும்பை: தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மத போதகர் ஜாஹிர் நாயக் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
2016 வங்கதேசம் டாக்காவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவர் மும்பை மதபோதகர் ஜாஹிர் நாயக்,51 டி.வி. பேச்சை கேட்டு தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி, அமலாக்கத்துறை ஜாஹிர் நாயக் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. நாட்டை விட்டு சென்றவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. ஜாஹிர் நாயக்கின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் தாம் குறிப்பிட்ட மதம் சார்ந்தவன் என்பதால் எனது பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. இதனை நீக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூலக்கதை