நியூயார்க் குண்டு வெடிப்பு எதிரொலி : அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : நியூயார்க் குண்டு வெடிப்பை தொடர்ந்து அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பேருந்து முனையம் பகுதியில் நேற்று உடலில் பைப் குண்டு கட்டிக்கொண்டு வந்து ஒரு வாலிபர் வெடிக்கச்செய்தார். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடலில் குண்டு கட்டிக்கொண்டு வந்த நபரும் படுகாயம் அடைந்தார். நியூயார்க் போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அந்த நபர், வங்கதேசத்தை சேர்ந்த அகாயத் உல்லா(27) என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:  நியூயார்க் நகரில் இரண்டு மாதங்களில் இது இரண்டவது தாக்குதல். எனவே அமெரிக்க மக்களை காப்பாற்ற நமது சட்ட விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம். கைது செய்யப்பட்ட நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவர் குடும்ப புலம்பெயர்தல் விசா மூலம் அமெரிக்கா வந்துள்ளார். இந்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இந்த அனுமதி விசா மூலம் தீவிரவாத சந்தேகம் உள்ள பலர் எளிதாக நமது நாட்டிற்குள் வந்து விடுகின்றனர். எனவே அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். குறிப்பாக குடும்ப உறவுகளுக்கு விசா அளிப்பதை நிறுத்தக்கூடிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ேவண்டும். ஏனெனில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியது. என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவும், அமெரிக்கர்களின் பாதுகாப்பும் தான் முதலில் முக்கியம். அதற்கு நமது குடியேற்ற சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மாற்றி அமைப்பது அவசியம். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டணை வழங்கக்கூடிய அளவுக்கு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.* அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் 8 முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்தார். எதிர்ப்பு கிளம்பினாலும் அவரது சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.* தற்போது நியுயார்க் நகரில் குண்டு வெடிக்கச்செய்த வாலிபர் அமெரிக்காவுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளார்.ஐஎஸ் ஆதரவாளர்நியுயார்க் நகரில் குண்டு வெடிக்கச்செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அகாயத் உல்லா ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை டிரம்ப் அறிவித்ததால் ஆத்திரம் அடைந்து நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் டெய்லர் ஹவுல்டன் கூறுகையில், ‘‘உல்லா தற்போது அமெரிக்காவின் சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றவர். புரூக்ளின் பகுதியில் வசித்து வருகிறார். 2012 மார்ச்சில் கார் ஓட்டும் உரிமம் பெற்றுள்ளார். 2015 மார்ச் மாதத்திற்கு பின் அவர் அதை மீண்டும் புதுப்பிக்கவில்லை. ஐஎஸ் அமைப்பு தன்னை கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

மூலக்கதை