இலங்கை பிரதமர் ரணிலுடன் விமான படை தளபதி சந்திப்பு

தினமலர்  தினமலர்
இலங்கை பிரதமர் ரணிலுடன் விமான படை தளபதி சந்திப்பு

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, நம் விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா, இலங்கை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கேவை, நேற்று சந்தித்து, இரு தரப்பு ராணுவ உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நம் விமானப் படையின் தளபதி, பி.எஸ்.தனோவா, நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, இலங்கைக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம், இலங்கை விமானப் படை தளபதி, கபிலா ஜெயம்பதி, ராணுவ அமைச்சர், ருவான் விஜயவர்த்தனே, ராணுவச் செயலர், கபிலா வைத்யரத்னே உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கேவை, நேற்று அவர் சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும், ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.


மூலக்கதை