சிரியாவில் பதற்றம் குறைந்ததால் ரஷ்ய படைகளின் ஒரு பகுதியை திரும்ப பெறுகிறார் புதின்

தினகரன்  தினகரன்

மாஸ்கோ: சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு படைகளின் ஒரு பகுதியை அங்கிருந்து வெளியேறுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புரட்சி படையினர் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவின் விமானப்படையினரும், காலாட் படையினரும் அங்கு முகாமிட்டு போரில் ஈடுபட்டு வந்தனர்.அங்கு ஒரளவுக்குள் நிலை கட்டுக்குள் வந்ததையடுத்து சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள தங்கள் படைகளை அங்கிருந்து வெளியேறுமாறு ரஷ்யா அதிபர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஹமைனில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சிரியா அதிபர்  பஷர் அல்-அஸாத் புதின் பார்வையிட்டார். சிரியாவில் உள்நாட்டு சண்டை காரணமாக நிலவிய அரசியல் குழப்பத்தால் அந்த நாட்டை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி ரஷ்ய போர் விமானங்கள் கடந்த 2015 முதல் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை