வறட்சி பாதிப்பு எதிரொலி : இரண்டாம் கட்டமாக 1000 டன் அரிசியை சீனாவிடமிருந்து பெற்றது இலங்கை

தினகரன்  தினகரன்

கொழும்பு: வறட்சி பாதிப்பு காரணமாக சீனாவிடமிருந்து, இரண்டாம் கட்டமாக 1000 மெட்ரிக் டன் அரிசியை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா 2750 மெடரிக் டன் அரிசியை நன்கொடையாக வழங்க முன்வந்து. முதற்கட்டமாக கடந்த நவம்பரில் 1000 மெட்ரிக் டன் அரிசி இலங்கையை வந்தடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீனாவிலிருந்து 1000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இது நேற்று இலங்கையை வந்தடைந்தது. சீன அதிகாரிகளிடமிருந்து, இலங்கை அதிகாரிகள் இந்த அரிசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாம் கட்டமாக 750 மெட்ரிக் டன் அரிசி இந்த மாத இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை