இரட்டை காவல்துறையினர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - சிக்கிய மரபணு ஆதாரங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இரட்டை காவல்துறையினர் கொலை வழக்கில் புதிய திருப்பம்  சிக்கிய மரபணு ஆதாரங்கள்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் Magnanville இல் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், தற்போது சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன. நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் Magnanville (Yvelines) இல் காவல்துறையினர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் இடம்பெற்ற ஒரு வருடத்தின் பின்னர், இன்று திங்கட்கிழமை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் அடையாளங்கள், காவல்துறை அதிகாரியின் கணணியில் பதிவாகியுள்ளமை பரபணு சோதனை (DNA) மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
Jessica Schneider மற்றும் Jean-Baptiste Salvaing ஆகிய இரு அதிகாரிகளும் அவரிகளின் பிள்ளை முன்னால் மிக கொடூரமான முறையில் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரட்டை கொலை அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை