டோக்லாமில் படைகளை குவித்து மீண்டும் சீனா அட்டூழியம்

தினமலர்  தினமலர்
டோக்லாமில் படைகளை குவித்து மீண்டும் சீனா அட்டூழியம்

புதுடில்லி: இந்திய-சீன எல்லையான டோக்லாமில் சீனா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியா-- , சீனா, பூட்டான் எல்லையான டோக்லாமில் சீன தனது படைகளை குவித்தது மேலும் இந்தியாவின் சாலைப்பணிகளை தடுத்து அட்டூழியம் செய்தது. 73 நாட்கள் நீடித்த இந்த பிரச்னை ஆகஸ்ட 28-ம் தேதி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஹிமாலாய பணி பிரதேசத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டதால் இந்திய- , சீன , இருநாடுகளும் படைகளின் எண்ணிக்கை குறைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. இந்த முறை சீனா சுமார் 1600 முதல் 1800 வீரர்களை டோக்லாமில் குவித்து சாலைப்பணிகள், பதுங்கு குழிகளை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு மீண்டும் தனது அட்டூழியத்தை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவர்களை இங்கு நிரந்தரமாக பணியமர்த்த சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை