நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்! - பாதிப்புக்குள்ளாகும் RER A மற்றும் B!!

PARIS TAMIL  PARIS TAMIL
நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!  பாதிப்புக்குள்ளாகும் RER A மற்றும் B!!

நாளை டிசம்பர் 12 ஆம் திகதி மாபெரும் பணி பகிஷ்கரிப்பு மற்றும் வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RER A மற்றும் B  சேவைகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
CGT, Unsa, SUD மற்றும் FO ஆகிய தொழிற்சங்க ஊழியர்களுக்கு இந்த வேலைநிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் RER A மற்றும் B பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் நேரத்தில் இரண்டில் ஒரு தொடரூந்து மாத்திரமே இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையம் நோக்கி செல்லும் பயணிகள் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. RER B சேவைகளில் நான்கில் ஒரு தொடரூந்து மாத்திரமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பேரூந்து மற்றும் ட்ராம் சேவைகள் எவ்வித பாதிப்புக்களும் இன்று வழமை போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை