திருமணம் பந்தத்தில் இணைந்த கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா!

PARIS TAMIL  PARIS TAMIL
திருமணம் பந்தத்தில் இணைந்த கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இன்று இத்தாலியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
 
விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியாகி வந்தது.
 
ஆனால், திருமணம் தொடர்பாக இருவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.
 
ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
 
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இன்று காலை இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.
 
மேலும், பஞ்சாபி முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பஞ்சாபி நடையில் கோஹ்லி அனுஷ்கா திருமணம் நடந்து முடிந்துள்ளது.
 
மிலன் நகரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் திருமணத்திற்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்துள்ளது.
 
அழைப்பிதழ் கொண்டு வருபவர்களை மட்டும் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்துள்ளனர்.
 
இதையடுத்து, வரவேற்பு நிகழ்ச்சியானது மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வரும் 26ம் திகதி நடக்கவுள்ளது.
 
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்ளயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை