கடும் புயல் - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடும் புயல்  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில்!!

இன்று திங்கட்கிழமை காலை முதல் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக, 130 கிலோமீட்டர்கள் வேகம் வரை புயல் காற்று பதிவாகியுள்ள Pays de la Loire இல் மாத்திரம் 50,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. Nord, Pas-de-Calais, Pays de la Loire ஆகிய மூன்று மாவட்டங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று திங்கட்கிழமை காலை முதலே மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிவரை மொத்தமாக 110,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிகபட்சமாக காற்றின் வேகம் 127 கிலோமீட்டர்கள் வரை பதிவானதாகவும், தற்போது வரை 1,055 அவசர அழைப்புக்கள்  பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் எவ்வித மின் தடையும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை