35 ஆண்டுகால தடைக்கு பின் சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு அனுமதி

தினகரன்  தினகரன்

ரியாத்: சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து கடந்த 1980-ம் ஆண்டு சவுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனையடுத்து சவுதியின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆவாட் அலாவாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் வர்த்தக ரீதியான திரைப்படங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும் என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சவுதியில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. சவுதி மன்னராக அண்மையில் பொறுப்பேற்ற முகமது சல்மான் பழைய கட்டுப்பாடுகள் பலவற்றைத் தளர்த்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை