ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

PARIS TAMIL  PARIS TAMIL
ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

ஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சுமார் 10,000 ஜேர்மனியர்களை குறிவைத்து அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த இணையதளத்தை  சீனா பயன்படுத்துவதாக புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டி, இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜேர்மனி வெளியிட்டுள்ளது.
 
மேல்மட்ட ஜேர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவதாக புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக் மாசன் கூறியுள்ளார்.
 
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கடும் இணைய ஊடுருவல் மூலம்  தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட இருந்ததை  ஜேர்மனி கண்டுபிடித்தது.

மூலக்கதை