ரீபபுளிக்கன் உள்கட்சி தேர்தல்! - Laurent Wauquiez முதல் சுற்றில் அபார வெற்றி!!

PARIS TAMIL  PARIS TAMIL
ரீபபுளிக்கன் உள்கட்சி தேர்தல்!  Laurent Wauquiez முதல் சுற்றில் அபார வெற்றி!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ரீபபுளிக்கன் உள்கட்சி தேர்தலின் முதல் சுற்று இடம்பெற்றது. இதில் அபார வாக்குகள் வித்தியாசத்தில் Laurent Wauquiez வெற்றி பெற்றுள்ளார். 
 
ரீபபுளிக்கன் கட்சியின் தலைமைத்துவத்துக்கான தேர்தலில், அக்கட்சியின் ஆரதவாளர்கள்  99,597 பேர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  முன்னாள் அமைச்சரும், தற்போதைய Auvergne-Rhône-Alpes மாகாண முதல்வருமான Laurent Wauquiez, 74.64% வீத வாக்குகள் பெற்று, முதல் சுற்றில் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 73,554 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டதாகவும், இரண்டாவது இடத்தில் 15,876 வாக்குகளுடன் Taverny (Val-d'Oise) நகர முதல்வர் Florence Portelli இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உள்கட்சி தேர்தலில், இத்தனை ஆயிரம் வாக்குகள் செலுத்தப்படும் என தாம் நினைத்திருக்கவில்லை எனவும், ஆதவாளர்களில் சில 20,000 - 30,000 வரையான வாக்குகளே பதிவாகும் என தாம் நினைத்திருந்ததாகவும், ஆனால் ரீபபுளிகன் கட்சியின் 234,556  அங்கத்தவர்களில், 42.46 வீதமானவர்கள் (99.597 பேர்கள்) தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை