ஒரே ஆண்டில் அதிக ரன் எனது சாதனையை கோஹ்லி அடுத்த ஆண்டு முறியடிப்பார்: சங்ககரா கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே ஆண்டில் அதிக ரன் எனது சாதனையை கோஹ்லி அடுத்த ஆண்டு முறியடிப்பார்: சங்ககரா கணிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தனது அபார பேட்டிங் திறமையால் ஒவ்வொரு தொடரிலும் மாஜி வீரர்களின் சாதனைகளை தகர்த்து வருகிறார். அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 இரட்டை சதம், ஒரு சதத்துடன் 610 ரன்கள் குவித்து கோஹ்லி தொடர் நாயகன் விருது வென்றார். இந்த ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 2818 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கு முன் 2014ல் சங்ககரா 2868 ரன்களும், ரிக்கி பாண்டிங் 2005ல் 2833 ரன்களும் அடித்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இந்த சாதனைகளை தகர்க்க கோஹ்லிக்கு வாய்ப்பு இருந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி. 20 தொடரில் அவர் விளையாட வில்லை.

இதனால் அந்த சாதனை முறியடிக்கும் வாய்ப்பு நழுவியது. இந்நிலையில் எனது சாதனையை அடுத்த வருடத்தில் கோஹ்லி முறியடிப்பார் என சங்ககரா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், எனது சாதனையை முறியடிக்க விராட் கோஹ்லி அதிக ஆண்டுகள் எடுத்துக்கொள்வார் என நினைக்கவில்லை. அடுத்த ஆண்டிலேயே எனது சாதனையை அவர் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.

என்னை விடவும் ஒரு ஆண்டில் அதிக ரன் சேர்ப்பார்.

அவர் ஒரு மாறுபட்ட வர்க்கம் என தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை