ஆப்கனுடன் 2வது ஒன்டே அயர்லாந்து அணி வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆப்கனுடன் 2வது ஒன்டே அயர்லாந்து அணி வெற்றி

சார்ஜா:ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.   முதல் போட்டியில் 138 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி சார்ஜாவில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் அடித்தது.

அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 82, ஜார்ஜ் டாக்ரெல் 62 ரன் அடித்தனர். 272 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆப்கன் 45. 2 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் 51 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பேரி மெக்கர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.



.

மூலக்கதை