தென்ஆப்ரிக்க தொடர் கடும் சவாலானது: வினோத் காம்ப்ளி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்ஆப்ரிக்க தொடர் கடும் சவாலானது: வினோத் காம்ப்ளி பேட்டி

மும்பை; இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒன்டே மற்றும் 3 டி. 20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.

நம்பர் ஒன் அணியாக உள்ள இந்தியாவின் தென்ஆப்ரிக்க தொடர் பெரும் எதிரபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி அளித்துள்ள பேட்டி: இந்திய அணியின் தென்ஆப்ரிக்க தொடர் கடும் சவால் நிறைந்தது.

தென்ஆப்ரிக்க பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளிப்பார்கள்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் தற்போதைய அணுகு முறையை பார்க்கும் போது வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்திய அணி நன்றாக விளையாடும் என உணர்கிறேன். அந்த நம்பிக்கை உள்ளது.

நம்மிடம் வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. இதனால் இந்தியா கடும் சவால் அளிக்கும்.

கோஹ்லியின் விளையாட்டு ஸ்டைல் ஆச்சரியமாக உள்ளது. அவரின் பேட்டிங்கை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.



.

மூலக்கதை