லாவோஸ் நாட்டில் பரிதாபம் அணை உடைந்ததில் 100 பேர் மாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாவோஸ் நாட்டில் பரிதாபம் அணை உடைந்ததில் 100 பேர் மாயம்

பாங்காக்: லாவோஸ் நாட்டில் அணை உடைந்து ஊருக்குள் புகுந்ததில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில், அட்டபேவு மாகாணத்தில் உள்ள அணை ஒன்றில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென அணையில் உடைப்பு ஏற்பட்டது.சீறிப்பாய்ந்த வெள்ளம் அருகேயுள்ள கிராமங்களில் புகுந்தது. இதில் வீடுகள் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டன.

100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில அடித்து செல்லப்பட்டனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி மும்முரமாக நடக்கிறது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

அணை உடைந்து திடீரென கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.      

.

மூலக்கதை