தலிபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலிபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானில், தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில், 24 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்ெகாலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் நடந்த மோதலில் 2 படைத் தளபதிகள் உட்பட 24 தலிபான்கள் பலியாகினர்.

காஸ்னி மாகாணத்திலுள்ள ஜகாத், கிலன் மாவட்டங்களில் தலிபான்களுக்கும் ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பாதுகாப்புப் படையினர் இருவர் உயிரிழந்தனர்.

மேலும், 17 பேர் காயமடைந்தனர்.

தலிபான்களின் படைத் தளபதிகளான முபாரஸ் கோச்சி, காலித் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.

.

மூலக்கதை