கனடாவில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; 13 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனடாவில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; 13 பேர் காயம்

டொரான்டோ: கனடாவின் டொரான்டோவில் க்ரீக்டவுன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில், பிறந்த நாள் விழா ஒன்று கொண்டாடப்பட்டது. அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

இந்த  துப்பாக்கிசூட்டில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு பெண் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்துவது பதிவாகியுள்ளது.

துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபர், தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாகவும் செய்திகள் வௌியாகி உள்ளன.

சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை