யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 3 மரம் மரணங்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 3 மரம் மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் வெவ் வேறு சம்பவங்களில் திடீரென மயங்கிய மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமலிங்கம் (வயது-60) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தை, வீட்டில் பாக்கு இடித்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென அவர் மயங்கிச் சரிந்துள்ளார். மயங்கியவரை உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பலாலியை சேர்ந்த குணசீலன் குயின்சன் (வயது-30) என்ற இளைஞன் நேற்றுக் காலை தனது வீட்டில் காலை உணவாக பிட்டுச் சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு வாந்தி ஏற்பட்டதுடன் மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். மயக்கமடைந்தவரை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் பெரிய தம்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் இராசதுரை (வயது-60) என்ற முதியவர் யாழ்ப்பாணம் சங்கானை தொட்டிலடிப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு 20ஆம் திகதி வந்துள்ளார். தொட்டிலடிச் சந்தியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அவ்விடத்தில் நின்றவர்கள் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் சேர்பித்துள்ளனர்.
 
எனினும் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்ப விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

மூலக்கதை