தகவல் உரிமை சட்டத்தில் திருத்தம்; வாபஸ் பெற அரசுக்கு கோரிக்கை

தினமலர்  தினமலர்
தகவல் உரிமை சட்டத்தில் திருத்தம்; வாபஸ் பெற அரசுக்கு கோரிக்கை

புதுடில்லி : 'தகவல் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என, தகவல் கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.டி,.ஐ., எனப்படும், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஆறு முக்கிய அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்' என சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இது, மத்திய அரசுக்கு பெருத்த தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. அதனால், தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு, மத்திய தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள சட்ட திருத்தத்தால், தகவல் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கும் அதிகாரத்தை, மத்திய தகவல் ஆணையத்துக்கு, மத்திய அரசு கொடுப்பதில்லை. இது தொடர்பாக, அனைத்து தகவல் கமிஷனர்கள் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்ய வேண்டும். சட்ட திருத்தம் செய்யும் முயற்சியை வாபஸ் பெற வேண்டும், என கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை