நீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு: பாக். நீதிபதி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு: பாக். நீதிபதி குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்:  நீதித்துறையின் நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் உளவு துறையான ஐஎஸ்ஐ குறுக்கீடு செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஷாகத் அஜிஸ் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.  இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாகத் அஜிஸ் சித்திக். இவர் பாகிஸ்தான் உளவு துறையான ஐஎஸ்ஐ, நீதிமன்ற நடவடிக்கைகளை கையாள்வதற்கு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் ஐஎஸ்ஐ குறுக்கீடு செய்துள்ளது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தன்னை ஆக்குவதாக கூறி உளவுதுறை என்னை அணுகியது. அவர்களின் விருப்பத்திற்கு அமர்வுகளை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் புகார் தெரிவித்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் அறிக்கையில், ‘ குற்றச்சாட்டின் உண்மை தன்மையை குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை