மெற்றோவில் உதைப்பந்தாட்ட வீரர்களின் ஓவியங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மெற்றோவில் உதைப்பந்தாட்ட வீரர்களின் ஓவியங்கள்!!

உலக்கிண்ண போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு வழிகளில் அதன் வெற்றிகளை கொண்டாடி வருகின்றார்கள். சமீபத்தில் 920 கிலோ எடையுள்ள காளை ஒன்றுக்கு உந்தைப்பந்தாட்ட வீரர் Mbappé இன் பெயர் சூட்டப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. 
 
அதைத் தொடர்ந்து, தற்போது பரிஸ் மெற்றோ தொடரூந்துகளில் விளையாட்டு வீரர்களிளின் பெயர்களை பிரெஞ்சு உதைப்பந்தாட்ட உடையுடன், ஓவியர் ஒருவரின் கைவண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.  விளையாட்டு வீரர்களான Pavard, Pogba, Lloris, Matuidi, Kanté, Mbappé மற்றும் Griezman ஆகியோரின் பெயர்கள், பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் உடையுடன் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் தற்போது பயணிகள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 
முன்னதாக, பிரெஞ்சு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மோனாலிசா புகைப்படத்துக்கு பிரெஞ்சு அணியின் உடையினை கணனி வரைகலை செய்து பகிரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை