ஸ்டாட் டென்னிஸ் தொடர்: ஆலிஸ் கார்னெட் அசத்தல்

தினகரன்  தினகரன்
ஸ்டாட் டென்னிஸ் தொடர்: ஆலிஸ் கார்னெட் அசத்தல்

ஸ்டாட்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்டாட் ஓபன் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் லக்சம்பர்கின் மேண்டி மினெல்லாவுடன் நேற்று மோதிய கார்னெட் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் மேண்டி கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. உறுதியுடன் விளையாடிய கார்னெட் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவரது 6வது சாம்பியன் பட்டமாகும். 2016ம் ஆண்டுக்குப் பிறகு அவர் முதல் முறையாக டபுள்யு.டி.ஏ அந்தஸ்து டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார்.

மூலக்கதை