2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்

தினகரன்  தினகரன்
2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 490 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 139 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வருகிறது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி 338 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 214 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது. அந்த அணி நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.குணதிலகா 61, கருணரத்னே 85, மேத்யூஸ் 71, ரோஷன் சில்வா 32* ரன் விளாசினர். மகராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 490 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்துள்ளது. டி புருயின் 45 ரன், பவுமா 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 5 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 351 ரன் தேவை என்ற நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை