ட்வீட் கார்னர்... டாக்டரை மணந்தார்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... டாக்டரை மணந்தார்!

சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் மார்டினா ஹிங்கிஸ் (37 வயது). முன்னாள் நம்பர் 1 வீராங்கனை. இரண்டு முறை ஓய்வு முடிவு அறிவித்த பிறகு மீண்டும் களமிறங்கி மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் கலக்கியவர். ஒற்றையர் பிரிவில் 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். ஸ்வீடன் டென்னிஸ் வீரர் மேக்னஸ் நார்மன், ஸ்பெயின் கோல்ப் வீரர் செர்ஜியோ கார்சியோவுடன் டேட்டிங், செக். டென்னிஸ் வீரர் ரேடக் ஸ்டெபானக்குடன் நிச்சயதார்த்தம்... பிரிவு!, 2010ல் பிரான்ஸ் குதிரையேற்ற வீரர் திபால்ட் ஹூடினுடன் திருமணம், 2013ல் விவாகரத்து, இன்னும் பலருடன் இணைத்து கிசுகிசு... என்று சிறகடித்த ஹிங்கிஸ், விளையாட்டு போட்டிகளின்போது தனது மருத்துவ ஆலோசகராக இருந்த ஹரால்ட் லீமேனை கடந்த 20ம் தேதி மணந்தார். சுவிட்சர்லாந்தின் கிராண்ட் ரெசார்ட் முன்பாக இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

மூலக்கதை