ஆசிய ஜூனியர் பேட்மின்டன்: லக்‌ஷ்யா சென் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஆசிய ஜூனியர் பேட்மின்டன்: லக்‌ஷ்யா சென் சாம்பியன்

ஜாகர்தா: ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் நேற்று நடந்த பைனலில் முதல் நிலை வீரர் குன்லாவத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) மோதிய லக்ஷ்யா சென் 21-19, 21-18 என்ற நேர் செட்களில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 1965ல் நடந்த ஆசிய ஜூனியர் பேட்மின்டன் தொடரில் இந்திய வீரர் கவுதம் தக்கார் தங்கம் வென்றிருந்தார். 53 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லக்‌ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களுடன் இந்தியாவின் பி.வி.சிந்து (2011ல் வெண்கலம், 2012ல் தங்கம்), பிரணவ் சோப்ரா, பிரஜ்க்தா சாவந்த் (2009ல் வெண்கலம்), சமீர் வர்மா (2011ல் வெள்ளி, 2012ல் வெண்கலம்) ஆகியோரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை