பாகிஸ்தானில் இந்திய ஆதரவு நிலை

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் இந்திய ஆதரவு நிலை

புதுடில்லி : பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்திய ஆதரவு நிலை தென்படுகிறது.

பாகிஸ்தானில் நாளை மறுநாள்(ஜூலை 25) தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த கருத்து கணிப்புகளில் முன்னாள் பிரதமர் ஷெரீப், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது

மோடி போல் ஆட்சி:

இதுவரை இல்லாத மாற்றமாக முதன் முறையாக பாகிஸ்தான் தேர்தலில் இந்திய ஆதரவு கோஷம் முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை நடந்து அனைத்து தேர்தல்களிலும் இந்தியாவை விரோதியாக சித்தரித்தே பிரசாரங்கள் நடந்து வந்தன. இப்போது இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவோம் என ஷெரீப் சொல்ல, பிரதமர் நரேந்திர மோடி போன்று சிறப்பான ஆட்சியை தருவேன் என இம்ரான்கான் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஏக்கம்:

இந்தியாவின் முன்னேற்றமும் அமைதி சூழ்நிலையும் பாகிஸ்தான் மக்களிடமும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை போன்ற அமைதியான வாழ்க்கை வேண்டும் என்ற ஏக்கம் பாகிஸ்தான் மக்களிடம் ஏற்படத்துவங்கி விட்டது என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை