ஆன்லைனில் சாராயம் காய்ச்சும் உபகரணங்கள் விற்பனை: கேரளாவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
ஆன்லைனில் சாராயம் காய்ச்சும் உபகரணங்கள் விற்பனை: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள கலால் துறை ஆணையராக இருப்பவர் ரிஷிராஜ்சிங். அதிரடி அதிகாரியான இவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், சாராயம் காய்ச்சுவதற்கான சில உபகரணங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக ரிஷிராஜ்சிங்கிற்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதை உறுதி செய்வதற்காக அவர் நேரடியாக குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் நிறுவன இணைய தளத்தில் பரிசோதித்தார். இதில் அது உண்மையென தெரிய வந்தது. சாராயம் காய்ச்சுவது எப்படி என்பது பற்றிய விளக்கங்களும் அதில் இருந்தன. இதுபோல் கேரளாவில் ஏராளமானவர்கள் இந்த உபகரணங்களை வாங்கியதையும் அவர் கண்டுபிடித்தார். அவர்களது பெயர் விவரங்களையும் சேகரித்துள்ளார். இதனையடுத்து அந்த உபகரணங்களை யார் வாங்க ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட தினத்தில் அந்த உபகரணங்கள் அவருக்கு கிடைத்தது. ஆன்லைனில் பொருட்கள் விற்பதை மாநில அரசால் தடை செய்ய முடியாது. மத்திய அரசால் மட்டுமே தடை செய்ய முடியும். இதனால் ஆன்லைனில் சாராயம் காய்ச்சும் உபகரணங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப கேரள கலால் துறை ஆணையர் ரிஷிராஜ்சிங் தீர்மானித்துள்ளார்.

மூலக்கதை