சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 15 சதவீதம் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 15 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: சிறுபான்மையின மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை 15 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் துணை அமைப்பான மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை இந்தாண்டு 15 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ் 1.15 லட்சம் மாணவிகள் பயன் அடைந்தனர். அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த ஆண்டு ரூ.90 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9, 10ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 மற்றும் 11, 12ம் வகுப்புக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

மூலக்கதை