தமிழக அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் புதிய அணை : முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் புதிய அணை : முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு : ‘‘தமிழக அரசின் அனுமதி பெற்று காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில்  புதிய அணை கட்டப்படும்’’ என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். கன்னட பத்திரிகை அலுவலகத்துக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி, பதில் பேட்டியில் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னை இரண்டு மாநிலத்திற்கும் மிகப்பெரிய தலைவலியாக  இருந்தது. தற்போது மழை பெய்துள்ளதால் காவிரி தாய் அந்த பிரச்னையை தீர்த்து  வைத்துள்ளார். மழைக்காலத்தில் பல டிஎம்சி தண்ணீர் வீணாகின்றன.  அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில்  புதிய அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ேளாம். இந்த அணையை கட்டினால் தமிழகத்துக்கும் நன்மை ஏற்படும். இதை தமிழக அரசிடம் எடுத்து கூறி, புதிய  அணை கட்டுவதற்கு அனுமதி பெறப்படும். இந்த அணையை கட்ட கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடகா செய்து வரும் முயற்சிக்கு தமிழகம் மட்டுமின்றி தமிழக  விவசாயிகளும் அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.  புதிய அணை கட்டுவது பற்றி தமிழக அரசிடமும், விவசாயிகளிடம்  பேசுவதற்கு சென்னை செல்கிறேன். இதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை