சிரித்து சிரித்து ‘சிறை’யில் வைத்தாள் அழகி விரித்த வலையில் சிக்கி ரூ2.5 கோடி இழந்த தொழிலதிபர்

தினகரன்  தினகரன்
சிரித்து சிரித்து ‘சிறை’யில் வைத்தாள் அழகி விரித்த வலையில் சிக்கி ரூ2.5 கோடி இழந்த தொழிலதிபர்

பெங்களூரு : ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர், அழகியின் சிரிப்பில் மயங்கி ரூ.2.5 கோடியை இழந்துள்ளார். அந்த  அழகி மேலும் ரூ.75 லட்சம் கேட்டு மிரட்டுவதால் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர்,  பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றபோது 24 வயது அழகி அவரை பார்த்து சிரித்தார். தொழிலதிபரும் பதிலுக்கு சிரித்தார். அதன் பிறகு, தொழிலதிபரை அந்த பெண் பல இடங்களில் பார்த்தார். அதை இயல்பான  சந்திப்பு என்று தொழிலதிபர் நினைத்தார். ஆனால், அது திட்டமிட்ட சதி என்பது இப்போது அம்பலமாகி உள்ளது. தொழிலதிபரை அடிக்கடி பார்த்த அழகி, அவருடன் பேச்சு கொடுத்தார். அவளின் அழகிலும், சிரிப்பிலும் தொழிலதிபர் விழுந்தார். சில மாதங்களுக்கு முன், இருவரும் பாலியல் ரீதியாக இணைந்தனர். அதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்தார் அந்த அழகி. அதன் பிறகுதான், அழகியின் ஆட்டம் தொடங்கியது. படுக்கை அறை காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டிய அழகி, தொழிலதிபரிடம் லட்சம் லட்சமாக பணத்தை கறந்தார். இதுவரை ரூ.2.5 கோடியை அவர் வாங்கியுள்ளார். இனியும் தாங்காது என்ற முடிவுக்கு வந்த தொழிலதிபர், மாநகர போலீசாரின் உதவியை நாடினார். நடந்த  முழு சம்பவத்தையும் மனுவாக எழுதி கொடுத்தார்.  அதில், ‘அழகியை சந்தித்தது முதல் இப்போது வரை ரூ.2.5 கோடி கொடுத்துள்ளேன். அந்த பணம் கூட எனக்கு தேவையில்லை. இப்போது ஒரே கட்டமாக  ரூ.75 லட்சமாக கேட்கிறார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் ‘அந்த’ காட்சிகளை  எனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுவேன் என மிரட்டுகிறார்.  எனது மனைவிக்கு இது தெரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வது உறுதி’ என கூறியுள்ளார்.  ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமாரை போனில்  தொடர்பு கொண்டு, “தொழிலதிபர் எனது நண்பர். அவரிடம் பணம் பறித்த  அழகி மீது நடவடிககை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்’ என வேண்டுகோள்  விடுத்துள்ளார். இதையடுத்து, சுனில் குமார் உத்தரவின்  பேரில் போலீசார் அந்த அழகியை தேடி வருகின்றனர்.

மூலக்கதை