வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்

தினமலர்  தினமலர்
வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பரவலாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சில நடிகைகள் திரையுலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தபோது, நான் அப்படி நினைக்கவில்லை. அனைவருமே நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார்கள் என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவர் குறித்து ரகுல் பிரீத் சிங் கூறுகையில், என்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் ஏழையாக இருந்தாலும் சரி, என்னை நேசிப்பவராக, நல்லவராக இருக்க வேண்டும். அதோடு, நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதனால் அவர் அட்லிஸ்ட் 6 அடி உயரம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை